/* */

குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்

குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
X

குடியரசுதினத்தையொட்டி திண்டுக்கல்லில் தேசியக்கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்  விசாகன்.

திண்டுக்கல்லில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 73வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மூவர்ண பலூன் , சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் மருத்துவம், வருவாய், காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் 596 பேருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொரானா நெறிமுறை காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்..

Updated On: 26 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி