/* */

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் அவதி

50 -க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் பொருட்கள் வாங்குவதில் மக்கள் சிரமப்பட்டனர்

HIGHLIGHTS

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள்  அவதி
X

திண்டுக்கல் மாநகராட்சிப்பகுதியில்  உள்ள ரேஷன்கடையில் உள்ள கைரேகை இயந்திரம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் தொடர்ந்து பழுதானதால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. மேலும், பலரும் கைரேகையை பயன்படுத்துவதால் கொரொனா பரவும் அபாயமும் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொங்கல் தொகுப்பு தரமற்ற பொருட்களை கொடுத்ததால் பொது மக்களை ஏமாற்றமடைந்தனர். மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில் வழங்கக்கூடிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றாள் கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் கைரேகை சரியாக பதியவில்லை எனக் கூறி பொதுமக்களை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் கைரேகை இயந்திரத்தில் பொதுமக்களின் கைரேகை சரியாக பதிவாகவில்லை என கூறி நியாய விலை கடை ஊழியர்கள் பொதுமக்களை நாளை வாருங்கள் அலைய விடுகின்றனர். இதனால் அன்றாட கூலி வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நியாயவிலை கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வாங்க முடியாமல் பசி பட்டினியுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் கைரேகை விழாத இயந்திரத்தில் பலரின் கைரேகையை பதிவு செய்யும் பொழுது சொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பயத்துடன் தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் கைரேகையை பதிவு செய்யும் விதமாக நியாய விலை கடை அதிகாரி பொதுமக்களின் கையை பிடித்து இயந்திரத்தில் அழுத்த செய்வதால் அங்கு பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது.

மேலும் பொதுமக்களுக்காக வினியோகம் செய்யப்பட வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக வினியோகம் செய்யப்படாமல் வைக்கப்படுவதால் கெட்டுப்போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக வேலை செய்யாத கைரேகை இயந்திரத்தை மாற்றி மாற்று வழியில் பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  2. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  3. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  4. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  5. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  7. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  8. ஈரோடு
    கோபி அருகே வருவாய்த் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
  9. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  10. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...