குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி

தலைகவசம் மற்றும் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி
X

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் .

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன. இதில் சில குற்ற சம்பவங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்தும் ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், இன்று (21.09.2021) இரவு பாரதிபுரம் ஒத்தகண்பாலம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியே தலைகவசம் மற்றும் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும், கொலை, கொள்ளை, ரவுடிசம், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தெரியப்படுத்தும் தகவல்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.


Updated On: 21 Sep 2021 4:58 PM GMT

Related News