/* */

திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆடி மாதம் முதல் வெள்ளி மற்றும் பவுர்ணமி தினம் என்பதால் திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் 

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி தினம் என்பதால் திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து கோவில்களிலும் பெண் பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிமாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று. இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும் பவுர்ணமி தினத்தில் வந்த முதல் ஆடி வெள்ளி என்பதாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டும் திறந்து இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவில் வளாகத்தில் கூழ் ஊற்றி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு கோவில் உள்பிரகாரங்களில் அமர அனுமதிக்காமல் வெளியேற்றினர், வேண்டுதல் வைத்த பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து தயார் செய்து கொண்டு வந்த கம்மங்கூழ் ,கேப்பைக் கூழ் உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் கோவில்கள் திறக்கப்படாததால் கோவில் வாசலில் கூழ் ஊற்றிய சம்பவம் நடந்தது, இந்த ஆண்டு வழிபாட்டிற்கு அனுமதி அளித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வழிபாடு முடித்து விட்டு கூழ் ஊற்றி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருவது மனநிறைவைத் தருவதாக தெரிவிக்கின்றனர்.

இதே போல் ஆடி மாதம் முதல் வெள்ளி மற்றும் பெளவுர்ணமியை முன்னிட்டு மெங்கில்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பால நாகம்மா கோவிலில் ஏராளமான பெண்கள் பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.

Updated On: 23 July 2021 5:28 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து