/* */

வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் அவதி

தொடர் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீருடன் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் புகுந்தது

HIGHLIGHTS

வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீரும் புகுந்ததால்  மக்கள் அவதி
X

திண்டுக்கல் அருகே  சின்ன பள்ளப்பட்டி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன பள்ளப்பட்டி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. பள்ளபட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பரமன் என்பவர் இருந்து வருகிறார். பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன பள்ளப்பட்டியில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீருடன் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் புகுந்ததுள்ளது.

இப்பகுதியைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீரும் மழை நீரில் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு முழுவதும் ரோட்டிலே தஞ்சம் அடைந்த நிலை காணப்பட்டது.இதனைத் தொடர்ந்து மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவு நீரும் கலந்துள்ள நீரை வெளியேற்றி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை சரி செய்து தரும்படி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பெண்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் பள்ளபட்டி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பேசி, உடனடியாக சரி செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழை நீர் விடுவது குறித்து பலமுறை திமுக தலைவர் பரமனிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இரவு பகலாக பெய்த தொடர் மழை காரணமாக சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி பகுதிகளில் வசிக்கக்கூடிய 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைநீரில் தோல் தொழிற்சாலை கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Updated On: 2 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!