/* */

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது: நத்தம் விஸ்வநாதன்

திமுக ஆட்சியில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

HIGHLIGHTS

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது: நத்தம் விஸ்வநாதன்
X

நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாலர்களிடம் பேசுகையில், பழனியில் பாத யாத்திரை பக்தர்களுக்காக கழிப்பறை கட்ட உள்ள லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனியார் தொலைகாட்சி செய்தி வெளியிட்ட செய்தியாளர்க்கு விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் வாஞ்சிநாதன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். திமுக அரசு கூட்டணி கட்சியில் இருக்கும் நபரை காப்பாற்ற நினைக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. அச்சுறுத்தல் மற்றும் அச்சப்படாமல் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வன்முறையாளர்கள் கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்திரிகையாளர் மன்றம், ஊடகத்துறை செய்தியாளர் மீது செய்தி வெளியிட்ட நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டிப்பதாகவும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

Updated On: 11 Sep 2021 9:05 AM GMT

Related News