/* */

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X
திண்டுக்கல்லில் எம்ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரும், அ.தி.மு க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கழக அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில்

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த தி.மு.க. தற்போது எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மிகப்பெரிய ஒரு நாடகம் ஆடி வருகிறது. அரசியல் ஆண்மை இருந்தால் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதி கொடுக்கும் போது நகை கடன் தள்ளுபடியில் இன்று கூறிய சட்டதிட்டங்களை அன்றே கூறி ஓட்டு கேட்டு இருக்க வேண்டும்.

அரசியல் ஆண்மை இல்லாததால் பொய்யான வாக்குறுதியை கொடுத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து தற்போது மக்களை வஞ்சித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மத்தியில் தி.மு.க. கூறிய பொய்யான வாக்குறுதிகளை பொது மக்களிடம் எடுத்துக்கூறி வர இருக்கிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்வதற்கு எம்.ஜி ஆரின்105வது பிறந்த நாள் விழாவில் சபதம் ஏற்போம் என்றார்.

இவ்விழாவில் அமைப்புச் செயலாளர் வி மருதராஜ் ,கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, நடராஜன், பிரேம்குமார் மற்றும் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jan 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?