/* */

கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்புகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் 

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாசிப் பெருந்திருவிழா குறித்த முக்கிய அறிவிப்பினை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

மாசிப் பெருந்திருவிழா காலங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாக கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பூக்குழி உட்பட அனைத்து நேத்தி கடன்களும் வழக்கம் போல செய்யலாம். பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை.

கோவில் வளாகத்திற்குள் கடைகள், பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கொடிமரத்திற்கு காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தண்ணீர் ஊற்ற அனுமதி அளிக்கப்படும்

தினந்தோறும் அம்மன் நகர் உலா மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் முடிக்க வேண்டும். தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு திருக்கோவில் நடை சாத்தப்படும் என பரம்பரை அறங்காவலர்கள் அறிவித்துள்ளனர்


கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 30 Jan 2022 1:12 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!