/* */

கோம்பையான்பட்டி அணைகுளம் 12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது

கோம்பையான்பட்டி அணைகுளம் 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு நிரம்பியதை அடுத்து மறுகால் வெட்டிவிடும் விழா

HIGHLIGHTS

கோம்பையான்பட்டி அணைகுளம் 12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது
X

கோம்பையான்பட்டி கிராமத்தில் உள்ள அணைகுளத்தில் மறுகால் வெட்டி விடப்பட்டது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை அருகே கோம்பையான்பட்டி கிராமத்தில் உள்ள அணைகுளம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக குளம் நிறைந்து.

மறுகால் வாய்க்காலில் தண்ணீர் வெளியேறியதை அடுத்து கோம்பையான் பட்டி புனித பெரிய அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சேசு ஆரோக்கியம் மற்றும் அருட்தந்தையர்கள், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் மேகலா, அழகர் சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பகவதி, பெரியகோட்டை கிராமத்துக்கு உட்பட்ட எட்டு பட்டி கிராம முக்கியஸ்தர்களும் மற்றும் புகையிலைப்பட்டியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு பூஜைகள் செய்து மலர் தூவி மறுகால் வெட்டி விடப்பட்டது.

கோம்பையான் பட்டியில் உள்ள அணைக்குளம் தண்ணீர் மறுகால் செல்வதன் மூலம் வீர குடும்பன் மடை என்ற பாலன் குளம் ,கணக்கன் குளம் ,குரும்பன் குளம் ,சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் மடூர் கிராம எல்லைக்குட்பட்ட குப்ப நாயக்கன் குளம் ,பெரியகுளம் ஆகிய 5 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் புகையிலைப்பட்டி, மணியக்காரன் பட்டி, அன்னை நகர், வன்னிய பட்டி, கஸ்தூரி நாயக்கன்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி, நடுப்பட்டி, மற்றும் பெரியகோட்டை ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மறுகால் வெட்டிவிடும் விழா நடந்தது.

Updated On: 3 Dec 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்