/* */

அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை திமுக அரசு பழிவாங்குகிறது: நத்தம் விஸ்வநாதன்

திமுக அரசு அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கில் செயல்பட்டு வருகிறது என நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை திமுக அரசு பழிவாங்குகிறது:  நத்தம் விஸ்வநாதன்
X

அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தல் வேட்புமனுத் தாக்கலை துவக்கி வைத்த நத்தம் விசுவநாதன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் துவக்கி வைத்தார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் அன்பு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கார்த்திக், போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் ஜெகதீசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் உதயகுமார் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் தொழிலாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஒரு மாத காலமாக கழக அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுகளுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியாக இருந்ததைவிட எதிர்க்கட்சியாக கழகம் உள்ளபோதிலும் அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த தொழிலாளர்கள் நிர்வாகிகளுக்கான தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அண்ணா தொழிற்சங்கமே இருக்கக்கூடாது என கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்ற திமுக அரசு அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கில் செயல்பட்டு வருகிறது.

அவர்கள் உழைத்து சம்பளம் வாங்குகிறார்கள். உழைக்கின்ற தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பழி வாங்கக் கூடாது. அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை எவ்வித காரணமும் இல்லாமலும், குற்றச்சாட்டும் இல்லாமலும் இடமாறுதல் செய்து வருகின்றனர். மண்டல செயலாளரையே மண்டலம் விட்டு மண்டலம் மாற்றி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு எல்லாம் அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள். நீதிமன்றம் மூலம் தங்களது உரிமையை பெறுவார்கள். இவ்வளவு அடக்குமுறையையும் தாங்கி தொழிற்சங்க பேரவை தேர்தலில் தொழிலாளர்கள் போட்டியிடுவது கழகத்தின் மீது உள்ள பிடிப்பே காரணம் என்று பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளுக்கு வேட்புமனுத்தாக்கலை தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர்.

Updated On: 11 Sep 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி