/* */

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்காத பொதுமக்கள்

பொதுமக்களின் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் எந்த ஒரு காவல் துறை அதிகாரிகளும் இல்லாதது பெரும் குறையாகும்

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்காத பொதுமக்கள்
X

திண்டுக்கல்லில் முழு ஊரடங்கின்போது சாலையில் பொதுமக்களின்  நடமாட்டம் குறையவில்லை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்காத பொதுமக்கள். காவல்துறை அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு க ஊரடங்கானது அறிவித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, பேகம்பூர், நாகல் நகர், பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக ஆங்காங்கே வெளியே சுற்ற கூடிய நிலையானது தற்போது நிலவுகிறது.

கறிக் கடைகள், பல வணிக நிறுவனங்கள் திறந்துள்ள நிலையில் இன்று ஊரடங்கு உள்ளதா என்ற கேள்வி எழும்புகிறது.அல்லது இயல்பு நிலையில் உள்ளதா என்ற சந்தேகம் எழும்புகிறது.பேருந்து நிலையம் மாநகரின் முக்கிய வீதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்தே, காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களின் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் எந்த ஒரு காவல் துறை அதிகாரிகளும் இல்லாதது பெரும் நோய் தொற்றுக்கு வழி வகை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 9 Jan 2022 2:31 PM GMT

Related News