/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு பிரச்னைகளுக்கு 2 பேர் தீக்குளிக்க முயற்சி.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மூதாட்டிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து மனு கொடுக்க வந்த 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு பிரச்னைகளுக்கு 2 பேர் தீக்குளிக்க முயற்சி.
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளி்க முயன்ற மூதாட்டியை தடுக்கும் போலீஸார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு பிரச்சனைகளுக்கு 2 பேர் தீக்குளிக்க முயற்சி. செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி வனிதா (50) இவருக்கு சொந்தமான பள்ளபட்டி கிராமத்தில் 80 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் வனிதாவின் மகன் சாணக்கியன் என்பவர் பெயரில் உள்ளது. வனிதாவின் கணவர் கிருஷ்ண மூர்த்திக்கு இரண்டு மனைவிகள், இவரது 2-வது மனைவியின் மகன்கள் நிலத்திற்கு உரிமை கொண்டாடி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்,

இது தொடர்பான பிரச்சனையில் சாணக்கியனை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது இளைய தாரமான மனைவியின் மகன்கள் இருவர் சேர்ந்து, கடந்த 22-ம் தேதி தாக்கியதாக தெரிகிறது, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த வனிதா, மாவட்ட ஆட்சியர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறினர்.

அதேபோல, திண்டுக்கல் குருசாமி ஆசாரி சந்து பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் கையறு நிஷா (70)இவர் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யக்கோரி பள்ளிவாசல் நிர்வாக குழு செயலாளர் அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் நிர்ப்பந்தித்ததாக தெரிகிறது.

மேலும் நேற்று வீட்டில் இருந்த கையறு நிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியே அனுப்பி வீட்டை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது, இதனிடையே ஒரு நாள் முழுவதும் தெருவில் உறங்கிய நிலையில்,இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கையறுநிஷா தனக்கு நியாயம் வழங்க கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை மீட்டு அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மூதாட்டிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து மனு கொடுக்க வந்த நிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 25 Oct 2021 5:36 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  2. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  3. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  4. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  5. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  6. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  7. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  10. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்