திண்டுக்கல் அருகே விநோத திருவிழா-நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு

திண்டுக்கல் அருகே நடத்தப்பட்ட விநோத திருவிழாவில் நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திண்டுக்கல் அருகே விநோத திருவிழா-நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு
X

திண்டுக்கல் அருகே நிலப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட 11 வயது சிறுமி.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தேவிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு உலக அமைதி, ஊர் செழிக்க வேண்டியும் , நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும் தைப்பூச பௌர்ணமி அன்று நிலா பெண் தேர்வு செய்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக இந்த கிராமத்திலுள்ள சிறுமிகள் பொது இடத்தில் இரவு முழுவதும் அமர வைக்கப்படுவர்.

எந்த சிறுமி விடியும் வரை தூங்காமல் இருக்கிறாரோ அந்த சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. 20 க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டதில் விஸ்வநாதன் மற்றும் விசாலாச்சி தம்பதியரின் மகள் பிரத்திக்ஷா நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் 3 ஆண்டுக்கு நிலா பெண்ணாக இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சிறுமி எல்லையிலுள்ள சரளிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவர் ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலைச்சுமையாக தேவிநாயக்கன்பட்டிக்கு எடுத்து வந்தார்.

ஊர் திரும்பிய சிறுமிக்கு ஊர் மக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாசடச்சியம்மன் கோயிலுக்கு சென்று சிறுமி வழிபட்டார்.

தொடர்ந்து ஊர் எல்லையில் முறைமாமன்கள் தென்னை ஓலையால் மேய்ந்திருந்த குடிசையில் அமர வைக்கப்பட்டார். பின்னர், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

கோயில் முன்பு சிறுமி அமர வைக்கப்பட்டு கும்மியடித்து சடங்கு செய்யப்பட்டது. இன்று (19.01.2022)அதிகாலை நிலா மறைய தொடங்கியதும் ஆவாரம்பூ நிரம்பிய கூடையை சிறுமி தூக்கி சென்று அப்பகுதியிலுள்ள குளத்தில் வீசினார்.

தண்ணீரில் மிதந்த பூக்களில் அவர் விளக்கேற்றியதும் இந்த விளக்கு தொடர்ந்து 7 நாட்கள் எரியும் என்பது ஐதீகம் ஆகும்.

இதனால் மக்கள் நோய் நொடியின்றி, ஊர் செழித்து, மழை வளம் பெருகி சிறப்போடு வாழ்வார் என்பது மூதாதையர்களின் கூற்றாக இருந்தது. இதை தற்போது வரை இப்பகுதி மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 2. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 3. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 4. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 5. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 6. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு
 7. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
 8. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 9. செய்யாறு
  புதிய சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு
 10. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...