/* */

இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏர்ரப்பட்டியில் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஏர்ரப்பட்டியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், ஏர்ரப்பட்டியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், "தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் நாளை முதல் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நமது மூவர்ண தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். இந்த அற்புதமான நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் அறிந்து கொண்டு, அவர்களைப் போற்ற வேண்டும் என்றார்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதுடன், நமது நாட்டின் அறிவு சார்ந்த வளர்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாணவ மாணவிகள் நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நமது தேசியக்கொடி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அஞ்சலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கிறது. இதைப் பெற்று அனைவரும் அனைத்து பகுதிகளிலும் நமது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி வலியுறுத்தினார்.

முன்னதாக இது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் மாணவிகள் நமது தேசியக் கொடியை ஏந்தியவாறு கிராம மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இல்லம் தோறும் தேசியக்கொடிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் வீ. ஜான்சிராணி, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ஷகிலா, உ.கெளரி, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கௌரம்மாள் அரிச்சந்திரன், பொன்னரசு, கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Updated On: 13 Aug 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  2. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  3. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  4. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  6. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  7. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  8. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  10. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...