/* */

தர்மபுரி மாவட்ட உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

தர்மபுரி மாவட்ட உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி மாவட்ட உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, தருமபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்ர வாகனத்தின் கொள்ளளவு 125CC மிகாமலும் வாகன விதிமுறை சட்டம் 1998-ன்படி பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தரவாக இருத்தல் வேண்டும், 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதுமில்லை . ஒரே வக்பு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1.பேஷ் இமாம் 2.அராபி ஆசிரியர்கள் 3. மோதினார் 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று வயது சான்றிதழ், புகைப்படம், சாதி சான்று. மாற்று திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/LLR, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபுபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்ஃபுபில் கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும் மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 29.03.2022-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 March 2022 5:56 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு