/* */

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.எல்.ஏ

உம்மயம்பட்டியில் பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை பா.ம.க எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் அசத்தல்.

HIGHLIGHTS

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த  எம்.எல்.ஏ
X

உம்மயம்பட்டியில் பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை பா.ம.க எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் அசத்தல்

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1-8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 01.11.2021 இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களை வரவேற்கும் வகையில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்ற தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு மலர் கொத்து, இனிப்பு வழங்கி மாலை அணிவித்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, இண்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இண்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பள்ளி அறைகளில் நாற்காலியில் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் வகையில் பென்ச், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறை வசதி, நவீன தொழில்நுட்ப பலகை போன்ற வசதிகளை ஏற்படுத்த மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அப்போது தெரிவித்தார். பின்னர், டொக்கு போதனஅள்ளி ஊராட்சி - தாத நாயக்கம்பட்டி, தொப்பூர் ஊராட்சி - உம்மியம்பட்டி அரசு துவக்கப்பள்ளிகளின் மாணவர்களை மேளதாளங்களுடன், மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ப.சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் - ப.பெ.சக்தி, வ.அறிவு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், பள்ளியின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 Nov 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?