/* */

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை கண்காணித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையyf தொடங்கியது.

இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!