ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு
X

ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 21,000 கன அடியிலிருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, 10 நாட்களுக்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 11,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை நிலவரப்படி 21,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 21,000 கன அடியிலிருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது.

மேலும் மழை நீர் என்பதால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Updated On: 13 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 4. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 5. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 6. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 7. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 10. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...