/* */

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

பூனையானூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
X

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானூரில் நடைபெற்று வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிட பணியை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூனையானூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.19 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் கவிதா, கோபாலபுரம் கூட்டுறவு சக்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேகர், மதிவாணன், என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், நகர செயலாளர் சந்தோஷ், ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்