/* */

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் மனு தாக்கல்

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் மனு தாக்கல்
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், உள்ள மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த தாமரைச்செல்வன், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுவில், 18- வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே தேதியில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டு மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளிகண்ணனிடம், கட்சி சார்ந்த, சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்லாத்துகாடு பகுதியை சேர்ந்த சசிகுமார், ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து இன்று கடைசி நாளில் அ.தி.மு.க., சார்பில் ஆவாரங்காட்டூரைச் சேர்ந்த கண்ணன், தி.மு.க., சார்பில் போட்டியிடும் நொனங்கனூரைச் சேர்ந்த லதா தாமரைச்செல்வன், பா.ம.க, சார்பில் சித்தேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த், அ,ம,மு,க, வேட்பாளராக கோம்பூரை சேர்ந்த ஜெயராமன், தே.மு.தி.க சார்பில் மாங்கடை பகுதியை சேர்ந்த குழந்தை, பா.ஜ.க சார்பில் தொம்பகலானூரைச் சேர்ந்த சக்தி உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மேலும் சுயேட்சை சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ராமன், சாந்தி, குணசேகரன், இந்திராணி, சந்துரு என இன்று ஒரே நாளில் மொத்தம் 12 பேர் தங்களது வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளிகண்ணனிடம் தாக்கல் செய்தனர். தொடர்ந்து வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்ச குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும். இந்த இடைத்தேர்தலால் பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூடி, பரபரப்பாகவே இருந்து வருகிறது.

Updated On: 22 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  3. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  4. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  6. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  7. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  8. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  9. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  10. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...