பாலக்கோடு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை: விவசாயிகள் கவலை

வனத்துறை அதிகாரிகள் அலட்சியம். விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றையானையால் விவசாயிகள் கவலை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாலக்கோடு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை: விவசாயிகள் கவலை
X

பாலக்கோடு பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டுயானை.

வனத்துறை அதிகாரிகள் அலச்சியம் விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றையானையால் விவசாயிகள் கவலை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேவுஅள்ளி, கரகூர், சொக்கன் கொட்டாய், ஈச்சம்பள்ளம், காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாரக உள்ள நிலையில் அருகே உள்ள மொரப்பூர் காப்பூகாடு வனப்பகுதியிலிருந்து மக்கனா ஒற்றையானை இரவு நேரங்களில் வனத்தைவிட்டு வெளியே வந்து நெல்,கரும்பு ஆகியவற்றை சாப்பிட்டு சேதப்படுத்திவிட்டு விடியற்காலைக்குள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

இதுபோன்று கடந்த, 10 நாட்களுக்கு மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. ஒற்றை யானையை காப்புகாடு பகுதிகளுக்கு விரட்ட பலமுறை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கோடைகாலங்களில் காப்புக்காடு பகுதியில் தண்ணீர் தொட்டி இல்லாததால் போதிய தண்ணீரின்றி அடிக்கடி வன விலங்குகள் மற்றும் யானைகள் கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

விளை நிலங்களை சேதப்படுத்தும் இந்த ஒற்றையானை பொதுமக்களை தாக்ககூடும் என்கிற அச்சத்தில் இரவு நேரங்களில் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Jan 2022 5:30 AM GMT

Related News