/* */

பாலக்கோடு தக்காளி குளிரூட்டும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

பாலக்கோடு தக்காளி குளிரூட்டும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு தக்காளி குளிரூட்டும் மையத்தை  பயன்பாட்டுக்கு  கொண்டு வர கோரிக்கை
X

செடியிலேயே வீணாகும் தக்காளி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருவது வழக்கம். பாலக்கோடு, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வழக்கமாக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து தக்காளிகளை பாலக்கோடு பகுதியில் அமைந்த பிரத்தியக தக்காளி சந்தையில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து ஈரோடு.தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதியாகிறது.

கடந்த 2 மாதமாக தக்காளி கொள்முதல் விலை கிலோ 3ரூபாய்க்கு குறைந்து விற்பனையாவதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பறிக்காமல் விளை நிலத்திலேயே விட்டுள்ளனர்.

ஆட்கள் அறுவடை கூலி, வாகன வாடகை, சுங்ககட்டணம் என ஒரு கூடைக்கு 20 ரூபாய் வரை செலவு ஆகுவதால் தக்காளியை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் நிலையில் உள்ளது.

எனவே பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டு தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Updated On: 18 March 2022 5:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?