/* */

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை

பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை
X

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. நகரங்களை விட கிராமங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கே.பி.அன்பழகன் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு மருந்துகள் கையிருப்பு உள்ளதான என ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கே.பி. அன்பழகன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துறைத்தார். இந்த ஆலோசனையில் பாலக்கோடு ஒன்றியக் குழுத்தலைவர் சி.பாஞ்சாலை கோபால், அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2021 12:28 PM GMT

Related News