/* */

பாலக்கோடு அருகேசிறுத்தையை பிடிக்க கூண்டு: வனத்துறையினர் நடவடிக்கை

பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்

HIGHLIGHTS

பாலக்கோடு அருகேசிறுத்தையை பிடிக்க கூண்டு: வனத்துறையினர்  நடவடிக்கை
X

பாலக்கோடு அருகே சிறுத்தைய பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், காவேரியப்பன் கொட்டாய் வனப்பகுதியில் சிறுத்தை வரும் வழித்தடத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழியுடன் வைத்துள்ளனர். 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சிறுத்தை கிராமாத்திற்குள் புகுந்து கோழிகளை பிடித்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் ஆட்டுப்பட்டியில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த ஒரு தாய் ஆட்டையும் இரண்டு குட்டிகளையும் கடித்து குதறி கொன்று தின்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைய பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், காவேரியப்பன் கொட்டாய் வனப்பகுதியில் சிறுத்தை வரும் வழித்தடத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழியுடன் வைத்துள்ளனர், இதனால் விரைவில் சிறுத்தை சிக்கும் என எதிர்பார்த்து வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.


Updated On: 26 May 2022 4:45 AM GMT

Related News