அரூர் அருகே இன்று வளைகாப்புக்கு காத்திருந்த கர்ப்பிணி மர்ம உயிரிழப்பு

அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரூர் அருகே இன்று வளைகாப்புக்கு காத்திருந்த கர்ப்பிணி மர்ம உயிரிழப்பு
X

மர்மமான முறையில் உயிரிழந்த கர்ப்பிணி சோனியா.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா. இவர்களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் பிரதீப் கோவையில் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி சோனியா 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில், நேற்று மர்மமான முறையில் இவருடைய கணவரின் வீட்டில் தூக்கிலிட்டபடி இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவயிடத்திற்க்கு வந்த அரூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இறப்பில் மர்மம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா தற்கொலையா என அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிறைமாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் தூக்கிட்டபடி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...