/* */

அரூர் வேளாண் சங்கத்தில் 1400 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1400 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனையானது.

HIGHLIGHTS

அரூர் வேளாண் சங்கத்தில் 1400 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை
X

அரூர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வந்த மஞ்சள்.

தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய மஞ்சள் மற்றும் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் மொத்தம், 214 விவசாயிகள் 1400 மூட்டை மஞ்சளை எலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 214 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் குண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.6402 முதல் 7809 வரையும், விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.7102 முதல் 8012 வரை விற்பனையானது.

இந்த ஏலத்தில் 290 விவசாயிகள் கொண்டு வந்த 1400 மூட்டை மஞ்சள், 70 லட்சத்திற்கு விற்பனை ஆனது. கடந்த வார்த்தை விட, இந்த வாரம் விவசாயிகள் மற்றும் மஞ்சள் வரத்து குறைந்தது. மேலும் மஞ்சள் விலையும் குறைந்திருந்தது.

Updated On: 17 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!