/* */

அரூரில் குழந்தை விழுங்கிய 5 ரூபாய் காயினை 5 நிமிடத்தில் எடுத்த மருத்துவர்கள்

தருமபுரி மாவட்டம், அரூரில் நான்கு வயது குழந்தை விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை 5 நிமிடத்தில் அரசு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

HIGHLIGHTS

அரூரில் குழந்தை விழுங்கிய 5 ரூபாய் காயினை 5 நிமிடத்தில் எடுத்த மருத்துவர்கள்
X

நாணயத்தை விழுங்கிய குழந்தை ரிஷ்வந்த்.

தருமபுரி மாவட்டம், அரூர் வீரப்பநாய்க்கன்ப்பட்டியை சேர்ந்த முனிவேல்,ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு நான்கு வயதில் ரிஷ்வந்த் என்கிற குழந்தை உள்ளது. நேற்று குழந்தை தாய் ஜெயஸ்ரீ இடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு தின்பண்டங்களை வாங்கிச் சென்றுள்ளார்.

ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது, வாயில் வைத்து 5 ரூபாய் காயினை எடுத்து வாயில் போட்டு எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் ஜெயஸ்ரீயிடம், சிறுவன் காயின் விழுங்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தாய் ஜெயஸ்ரீ உறவினர்கள் உதவியுடன் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் அருண் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தொண்டை குழியில் காயின் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து லரிங்கோ ஸ்கோப் உதவியுடன், 5 நிமிடத்தில் குழந்தையின் தொண்டைக் குழியில் மாட்டியிருந்த காயினை, பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த பத்து நிமிடத்தில் துரிதமாக மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்யைளித்தால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ஐந்து ரூபாய் காயினை விழுங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பத்து நிமிடங்களில் பாதுகாப்பாக காரில் எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்