/* */

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு

கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, தருமபுரி ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு
X

சோமனஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை ,கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 379 இடங்களில் கோரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்து வருகிறது. இண்டூர் அடுத்த சோமனஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்ததாவது: கடந்த 24.09.2021 வரை தர்மபுரி மாவட்டத்தில் 793871 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 12.09.2021 அன்று மாவட்டம் முழுவதும் 830 இடங்களில் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில், 49136 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக, 22097 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 51 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று, 379 இடங்களில் முகாம் நடக்கிறது. பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

Updated On: 26 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!