/* */

தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

Today Accident News in Tamil- தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

HIGHLIGHTS

தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர்  உயிரிழப்பு
X

 தமிழக முதல்வர் அறிவித்த தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரத்தையும் தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று காலை நேரில் வழங்கினார்

Today Accident News in Tamil- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட வர்களுக்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தமிழக அரசு அறிவித்த இறந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 10-ந்தேதி திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி 11-ந்தேதி தீமிதித்தல் மற்றும் கும்ப பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.நேற்று மாலை பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் தேர் திடீரென்று முன்புறமாக கவிழ்ந்தது. இதனால் தேரை இழுத்து வந்த பக்தர்கள் சிதறி ஓடினர்.

இதில் தேருக்கு அடியில் சிக்கி பாப்பாரப்பட்டி சிவா காலனியை சேர்ந்த மனோகரன் ( 57), மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன்( 52) உள்ளிட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மாதேஅள்ளியை சேர்ந்த மாதேஷ், முருகேசன், பாப்பாரப்பட்டி அப்பு முதலி தெருவை சேர்ந்த முருகன் உள்ளிட்ட 5 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக முதல்வர் தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று இறந்த மனோகரன் மற்றும் சரவணன் குடும்பத்தினருக்கு மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்பு அவர்களின் குடும்பத்தினருக்கு , தமிழக அரசு அறிவித்த ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.இதேபோன்று காயம்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தையும் வழங்கினார். இந்த நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தர்மபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி,இன்பசேகரன், மாநில வர்த்தகரணி தர்மசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியதாவது: தேர் விபத்து எதிர்பாராதவிதமாக நடைபெற்றது. தேர்த் திருவிழா சம்பந்தமாக கடந்த 8ஆம் தேதி அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தேர்த்திருவிழா சம்பந்தமாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும் இது எதிர்பாராத விதமாக நடந்த வருந்தத்தக்க சம்பவம். காவல் துறையின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Jun 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  4. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  8. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  9. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'