/* */

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய பெண் சடலம் மீட்பு

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய பெண் சடலம் மீட்பு
X

பைல்படம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த்தம்பட்டி சென்னியம்பட்டி கொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி (35). இவர் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தேன்மொழி(34) என்ற மனைவியும் 2 மகள், மகன் உள்ளனர். தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 24 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அதன் பின்பு மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கணவர் ரவி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நேற்று காலை அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.தென்மொழி பயன்படுத்திய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதனால் செல்போன் டவர் சிக்னலை கொண்டு தீவிர விசாரணை நடத்தியபோது முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வனப்பகுதியில் செல்போன் சிக்னல் காண்பித்துள்ளது.

இதனால் போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தேன்மொழி அழுகிய நிலையில் சடலமாக பார்த்தனர். தேன்மொழி மூன்று நாட்களுக்கு முன்பு ஊத்துபள்ளம் அருகே ஒரு வீட்டில் தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பிறகு வந்து எடுத்துச் செல்வதாக கூறிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தேன்மொழி இறந்து கிடந்த வனப்பகுதிக்குள் ஆள் நடமாட்டமே செல்ல முடியாத இடம். இதனால் அவருடைய உடலை மீட்டு எடுத்து செல்வதில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தது.

Updated On: 27 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?