/* */

தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி

தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாணவியர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மொத்தம் 60 மாணவிகள் தங்கி, பயிற்சி பெறும் வகையில் வசதிகள் அமைந்துள்ளன. தற்போது கொரோனா காலம் என்பதால் 26 மாணவிகள் மட்டும் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவியர் விளையாட்டு விடுதிக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில், தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள மாணவியர் விளையாட்டு விடுதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த விடுதியில் மாணவிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன், அவர் கேட்டறிந்தார்.

மேலும், விடுதியை சுற்றி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதை பார்த்த அவர், தர்மபுரி மாணவியர் விளையாட்டு விடுதிக்கு 65 மீட்டர் சுற்றளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 27 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?