/* */

தர்மபுரி அருகே ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்

தர்மபுரி அருகே தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்
X

சிறந்த காளைக்கான பரிசை சேலம் பாய்ஸ் க்கு ஹீரோ ஹோண்டா பைக் முதல் பரிசாக வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தர்மபுரி தடங்கம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே உள்ள பி.எம்.பி.குழும கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் சித்ரா விஜயன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜல்லிக்கட்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் போட்டி விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் திறந்து விடப்பட்டன. 5 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் மொத்தம் 720 காளைகளும், அவற்றை அடக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டை பார்வையாளர்கள் கண்டுகளிக்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக குரல் எழுப்பியபடி ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக திறந்துவிடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் திறம்பட மடக்கினர்.

பல காளைகள் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பிடிபடாமல் கம்பீரமாக சென்றன. அத்தகைய காளைகளை பிடிக்க யோசித்த மாடுபிடி வீரர்கள் பின்வாங்கினார்கள்.

அதே நேரத்தில் வாடிவாசலில் இருந்து திமிறியபடி ஓடி வந்த பல காளைகளின் திமிலை பிடித்த மாடுபிடி வீரர்கள் அவற்றை அடக்கி தங்கள் வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். வாலை பிடிக்கக்கூடாது என்று விழாக்குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது போட்டி விதிமுறைகள் குறித்து அறிவித்தபடி இருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காமல் திமிறியபடி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள், பட்டுசேலை, டி.வி., மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள் என பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் சிலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில், தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 400 போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போட்டி நடந்த பகுதியில் தயார் நிலையில் இருந்தன.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் தாபா சிவா, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராமலிங்கம், துணை தலைவர் கந்தசாமி, ஊர்கவுண்டர் காளியப்பன், இண்டூர் வங்கித் தலைவர் பெரியண்ணன், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, தாசில்தார் வினோதா, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டில், மதுரை மாவட்டம் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரும் தலா 18 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்தனர். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதேபோல் காளைகளை அடக்கிய பிற வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கான பரிசுக்கு இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த சேலம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் சேலம் பாய்ஸ் வெள்ளைமாடு தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த பல்வேறு காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Updated On: 3 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?