/* */

தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தர்மபுரியில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக தொடங்கியது; 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
X

தர்மபுரியில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக தொடங்கியது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் பரவி சேலம், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி அடுத்த தடங்கம் மைதானத்தில் 2-வது மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டிக்காக கடந்த 3 நாட்களாக 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு, ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன், போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக துள்ளி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயற்சி செய்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி, சில்வர், பணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகளையும் விழாக்குழுவினர் வழங்கி வருகின்றனர். முதல் சுற்றில் 50 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் 10 மருத்துவ குழுக்களும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.

Updated On: 2 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. தொழில்நுட்பம்
    ரெட்மி நோட் 13க்கு ஹைப்பர்ஓஎஸ்!