/* */

தர்மபுரி அருகே லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் கடும் அச்சம்

தர்மபுரி அருகே விவசாய நிலங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகளிடையே கடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் கடும் அச்சம்
X

நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரத்தில் வெட்டுகிளிகள் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள்.

வடமேற்கு மாநிலங்களில்தான் வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இருந்துவந்துள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. வெட்டுக்கிளி படையெடுப்பை பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும், தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம் வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி உள்ள பகுதிகளாகும். இங்கு விவசாயிகளுக்கு கிணற்றுப்பாசனம் மட்டுமே கை கொடுப்பதால் அதிகளவு பொருட்செலவில் தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. சிறு பாதிப்பு கூட பெரிய அளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் நிலை உள்ளது.

இந்நிலையில், நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து சுமார் 10 ஏக்கர் நிலத்தில் விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை வழங்குமாறு கேட்டுள்ளார். 10 ஏக்கர் விவசாய பரப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மட்டும் பூச்சிக்கொல்லி மருந்தினை கொடுத்துள்ளனர்.

தற்போது வெட்டுக்கிளிகளை முழுமையாக அழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவை மேலும் அதிக அளவில் உற்பத்தியாகி மற்ற பகுதியில் உள்ள அனைத்து வகையான விவசாய பயிர்களையும் நாசம் செய்து விடும் என்ற அச்சம் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் 25 சதவீதம் மட்டுமே உயிரிழப்பதாகவும் 75% வெட்டுக்கிளிகள் மற்ற பகுதிகளுக்கு பறந்து செல்வதால் அவற்றை அழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்தவும் அவைகளை உடனடியாக முழுமையாக அழித்து விவசாய பயிர்களை காப்பாற்ற தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வெட்டுக்கிளிகளை முழுமையாக அழித்து விவசாய பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

வெட்டுக்கிளிகள் பெரும் படையாக உருவாகி பயிர்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் எட்டு வாரங்கள். இதற்குள் மூன்று முறை இவை முட்டையிடுகின்றன. அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுப்பவை.

பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும்.

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளித்தால் மட்டுமே முழுமையாக வெட்டுக்கிளிகளை அழிக்க முடியும்.

Updated On: 23 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  4. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  7. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  8. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?