/* */

தர்மபுரி: 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

தர்மபுரியில் 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருடு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

தர்மபுரி: 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு
X

தர்மபுரி பகுதியில் 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரியில் அடுத்தடுத்து உள்ள 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் புரோக்கர் ஆபீஸ் பஸ் நிலையம் அருகே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு உள்ள கடைகளில் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மெட்டல் சீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் ( 35) பிரிண்டர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.இவர் இன்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது மேற்கூரையை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இவர் கடையின் கல்லாவில் ரூ.2 லட்சம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 7 கடைகளில் திருட்டு இதேபோல் மாது என்பவர் நடத்தி வரும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இந்தநிலையில் காலையில் கடைகளின் மேற்கூரைகள் உடைக்கப்பட்டு இருப்பதை பற்றி தகவல் அறிந்த கடை உரிமையாளர்கள் அங்கு திரண்டனர்.

அப்போது வேலு என்பவர் நடத்திவரும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை, சந்திரகுமார் என்பவர் நடத்தி வரும் பம்புசெட் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை, சந்துரு,இமான் ஆகியோர் நடத்தும் கடைகள் என மொத்தம் 7 கடைகளில் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் பணம் திருடியது தெரியவந்தது. போலீசார் விசாரணை இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் திருட்டு நடந்த கடைகளை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கடைகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருட்டு நடந்த கடைகளில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். இந்த பகுதியில் உள்ள கடைகளில் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் திருடு போய் இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகருகே உள்ள கடைகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி