/* */

தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை திருடிய பெண்ணின் படம் வெளியீடு

தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தையை திருடிய பெண்ணின் படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்ணையும் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை திருடிய பெண்ணின் படம் வெளியீடு
X

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே, ஆண் குழந்தையை கடத்திக்கொண்டு பைக்கில் சென்ற பெண்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி வயது 19. நிறைமாத கர்ப்பிணியான இவரை, கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

அங்கு, மாலினிக்கு 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 20ந்தேதி காலை மாலினி கழிவறைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் இல்லாதநிலையில், அவரது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் .குழந்தை இல்லாததை அலறியடித்த மாலினி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி அண்ணாதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் குழந்தையைை திருடி சென்றது தெரியவந்தது.

அந்த பெண், வாலிபர் ஒருவருடன் பைக்கில் குழந்தையை கடத்தி செல்லும் போட்டோவைவை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவர்கள் பற்றிய விவரம் தெரிந்தால் உடனடியாக 9798170017 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On: 21 Jun 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  2. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  3. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  4. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  5. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  6. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  7. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  8. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  9. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  10. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!