/* */

தருமபுரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் துவக்கம்

தருமபுரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ல் தொடங்கப்பட்டு அப்பொழுது முதல் 86 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கும் பொருட்டும், பொதுமக்கள் அதிக அளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பொருட்களை வாங்கி பயன்பெறும் வகையிலும் விழா காலங்களில் 30% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்கான புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்ளுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை கோ-ஆப்டெக்ஸில் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

தீபாவளி 2020 பண்டிகைக்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகையில் கடந்த (2020) ஆண்டு ரூ.94.61 இலட்சத்திற்க்கும், அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த (2020) ஆண்டு ரூ.15.06 இலட்சத்திற்க்கும் என 2 விற்பனை நிலையங்களிளும் ரூ.109.67 இலட்சங்கள் (ரூ.1.09 கோடி) தீபாவளி 2021 பண்டிகைக்கு விற்பனை நடைப்பெற்றது.

இந்த தீபாவளி 2021 பண்டிகைக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகையில் இந்த (2021) ஆண்டு ரூ.270.00 இலட்சத்திற்க்கும், அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த (2021) ஆண்டு ரூ.40.00 இலட்சத்திற்க்கும், என 2 விற்பனை நிலையங்களுக்கும் ரூ.310.00 இலட்சங்கள் (ரூ.3.10 கோடி) தீபாவளி 2021 பண்டிகைக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கனவு நனவு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். அனைத்து வாடிக்கையாளர்களும் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டு பயன்பெறலாம்.

தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30% வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.

தற்போது தர்மபுரி, கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையம் கடை எண்.11, நாச்சியப்பா கவுண்டர் தெரு, தர்மபுரி - 636 701. தொலைபேசி எண். 04342-260145 இயங்கி கொண்டு இருக்கின்றது. தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தமிழ்நாடு அரசின் 30% சிறப்பு தள்ளுபடியுடன் கைத்தறி, பட்டு சேலைகள், ஏற்றுமதி இரகங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அ.கோபால், தர்மபுரி வருவாய் வட்டாட்சியர் இராஜராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  4. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  5. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  6. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  8. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  9. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்