Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
மாவட்டத்தில் தற்போது 100பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 154 ஆகும். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 771பேர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.