/* */

இலளிகம் அரசு பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

முப்பரிமாண அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்பட கருவி இணைத்த ட்ரோன் ஆகியவை காட்சி படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இளலிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் திறப்பு விழாவிற்கு தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட மருத்துவக்கல்லூரியின் முதல்வர் அமுதவள்ளி லேபை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் சீனிவாசன் ஆய்வகத்தின் செயல்பாடுகள்பற்றி விரிவானமுறையில் எடுத்துரைத்தார். மாணவர்கள் விழாவில் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக நடமாடும் ரோபோ சிறப்பு விருந்தினரை வரவேற்று பூங்கொத்து வழங்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் முப்பரிமாண அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்பட கருவி ( Camera) இணைத்த ட்ரோன் 20 அடி உயரம் பறந்தது. இந்த ட்ரோன் எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக அலைபேசியில் பார்த்த சிறப்பு விருந்தினர் இதை தயாரித்து இயக்கிசெயலாக்கம் செய்த மாணவர்களை பாராட்டினர்.

பள்ளியின் முதுகலை ஆசிரியர் கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார். இலளிகம் பஞ்சாயத்து தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர்களும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Updated On: 23 Sep 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?