/* */

கல்வி விடுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு

தருமபுரி மாவட்ட கல்வி விடுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணபிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி விடுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு
X

தருமபுரி மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப்பணியாளர் - பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.


பகுதி நேர தூய்மைப்பணியாளர் (ஆண்/பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுdiaவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2.வயது வரம்பு:01.07.2022 தேதியில் SC/ST - 18 முதல் 37, BC/BCM/MBC & DNC - 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த தகுதிகளுடன் தருமபுரி மாவட்டத்திலுமான விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உdiaவர்கள், உரிய விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பால் போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் மேல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 04342-231861 என்ற தொலைபேசி எண் மற்றும் https://dharmapuri.nic.in என்ற இணைய தளத்தை காணவும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினிதெரிவித்துள்ளார்.

Updated On: 13 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  4. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  5. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  6. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  7. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  8. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  9. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை