/* */

தீவிரமடைகிறது மாண்டஸ் புயல்- எந்ததெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?

மாண்டஸ் புயல் தீவிரமடைவதால் எந்ததெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தீவிரமடைகிறது மாண்டஸ் புயல்- எந்ததெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?
X

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேண்டஸ் புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் சில நாட்கள் புயல் சின்னம் உருவானது காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டடங்களிலும் பலத்த மழை செய்தது. ஆனால் அதன் பின்னர் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை. மழைக்கு பதிலாக பனிப் பொழிவு கடுமையாக உள்ளது.

இந்த நிலையில் தான் வங்க கடலில் நேற்று முன்தினம் மாலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டது.இந்த பெயரை ஐக்கிய அரபு அமீரகம் இந்த பெயரை பரிந்துரை செய்தது.

மேண்டஸ் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென் கிழக்கு திசையில் 770 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்கால் தென் கிழக்கே 690கி.மீ தொலைவில் நிலைகொண்டு உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை , திருச்சி , ராமநாதபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழக கடற்கரை பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும், இதனால் மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

டிசம்பர் 09-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Updated On: 9 Dec 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு