/* */

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு
X

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க விவசாயிகள் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தனியார் மண்டபத்தில் கடலூர் மாவட்ட கரும்பு வளர்ப்பு சங்க பொதுக்குழு கூட்டம் கௌரவ தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது .இதில், விருத்தாசலம் திட்டக்குடி, பெண்ணாடம் ,வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

மூடி கிடக்கும் பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் விருத்தாசலம் அருகே உள்ள சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தி, இந்த ஆலை பகுதிக்கு கரும்பு சப்ளை செய்யும் உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைப்பது,

கடந்த 4 ஆண்டுகளாக ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எப்ஆர்எப் தொகை 30.99 கோடி ரூபாய் மற்றும் எஸ்.ஏ பி. ரூ. 78.62 கோடி, திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எப்.ஆர்.பி. தொகை ரூ.11.20 கோடி மற்றும் எஸ்.ஏ.பி.ரூ. 43. 79 கோடி நிலுவைத் தொகையையும், விவசாயிகளின் பெயரில் வங்கியில் பெற்ற ஹார்வேஸ்ட் டிரான்ஸ்போர்ட் வங்கிக் கடன் ரூ. 40 கோடி விவசாயிகளுக்கு விரைவாக வழங்க தமிழக முதலமைச்சரையும், மற்றும் வேளாண் துறை அமைச்சரையும், தொழிலாளர் நலத் துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவது, கரும்புக்கு கட்டுப்படியான விலை பெறுவது, கரும்பு பயிரிட ஆகும் செலவு கூடுதலாகவும், ஆள் கூலி அதிகமாக ஆவதாலும் ஒரு டண் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் , கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தையும் பெற சர்க்கரை ஆலை முன்பு உண்ணாவிரதம் மற்றும் அறப் போராட்டம் நடத்துவது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 6 Jan 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்