/* */

விருத்தாசலம் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு: நோயாளிகள் சரமாரி புகார்

விருத்தாசலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அமைச்சரிடம் நோயாளிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு: நோயாளிகள் சரமாரி புகார்
X

விருத்தாசலம் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார்


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா நோயாளிகள் கழிவறைகள் சுத்தமாக இல்லை எனவும், இது குறித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.அவர்களை சமாதானம் செய்த அமைச்சர், நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அலுவலர்களிடம் உடனடியாக, முழு கவச உடையணிந்து, இரு வேளை கழிவறைகளை சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து,விருத்தாசலம் சக்தி நகரில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர், அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலெக்டர் பாலசுப்ரமணியம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, சுகாதார ஆய்வாளர் ராஜா, பி.டி.ஓ., பிரேமா உடனிருந்தனர்.

பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பஸ் நிலையம், தனியார் பள்ளி ஆகிய இரு இடங்களில் கொரோனா உமிழ்நீர் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் கணேசன், கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மற்றும் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா என மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார். வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கணேசன், கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு, கழிவறை பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதை நோயாளிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், 'குடிநீர், கழிவறை உட்பட அடிப்படை வசதி குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும், கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்து தரப்படும்' என்றார்.

தொடர்ந்து திட்டக்குடி அரசு கல்லுாரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், மேல் ஆதனுாரில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, டாக்டர்கள் விவேக், செல்வேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 26 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  2. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  3. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  4. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  5. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  6. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  7. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு