Begin typing your search above and press return to search.
நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டக்குடி விவசாயிகள் கோரிக்கை
திட்டக்குடி வெலிங்டன் பாசன விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS

திட்டக்குடி வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து பிரதான கால்வாய், கீழ்மட்ட கால்வாய் வழியாக 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் வெலிங்டனிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்த நிலையில், இப்பகுதியில் மங்களூர், நல்லுார் ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல் பயிரிட்டனர்.
முதற்கட்ட அறுவடை முடிந்த நிலையில், தற்போது 2,000 ஏக்கர் நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து போனது.
மழையால் பாதித்த வயல்களை பார்வையிட வந்திருந்த அமைச்சர் கணேசனிடம், சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம், மருதத்தூர், புத்தேரி, தருமகுடிகாடு, தொளார் வடக்கு பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.