/* */

திட்டக்குடி அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

திட்டக்குடி அருேகே மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திட்டக்குடி அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
X
மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வையங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 100 ஆண்கள் 88 பெண்கள் மொத்தம் 188 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட மாணவர்களில் 8மாணவர்கள் 1 மாணவி உட்பட 9 மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவ மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர், கிராம இளைஞர்கள் உதவியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துள்ளனர்.

பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதா? அல்லது காலாவதியான முட்டைகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

Updated On: 23 Dec 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!