திட்டக்குடி அருகே சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் கைது

திட்டக்குடி அருகே சிறுவன் மர்ம மரணத்தில் திமுக நிர்வாகி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திட்டக்குடி அருகே சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் கைது
X

சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பூலாம்பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் அபிசுந்தர் என்னும் 17 வயது இளைஞரின் உடல் கிணற்றில் சடலமாக மீட்டக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில். முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்து கொலை செய்துள்ளாதாக நேற்று வேப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான 4 துணை கண்காணிப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அபி சுந்தரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை ஏற்காத அபிசுந்தர் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் கோட்டாட்சியர் தலைமையில் வேப்பூர் தாலுக்கா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது . உண்மை குற்றவாளிளை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இரவு வரை குற்றவாளியை போலீசார் கைது செய்யப்படவில்லை. இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை அடக்கம் செய்வதாக கூறி இரண்டாவது நாளாக இன்று மாலை வரை அடக்கம் .செய்யாமல் இருந்தனர்.

இதனையடுத்து வேப்பூர் போலீசார் பூலாம்பாடி திமுக கிளைக் கழக நிர்வாகி அண்ணாதுரை உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு அபிசுந்தர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் இரண்டு நாட்களாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Updated On: 13 March 2022 4:35 AM GMT

Related News