Begin typing your search above and press return to search.
திட்டக்குடி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அழுத அமைச்சர்
திட்டக்குடியில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் மனைவியை நினைத்து அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS

திட்டக்குடியில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன் தனது மனைவியை நினைத்து அழுதார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.
அமைச்சரின் சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி அழுதது விழாவில் பங்கேற்ற பொது மக்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. அமைச்சரின் மனைவி இறந்த பின்னர் சொந்த கிராமத்தில் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.