Begin typing your search above and press return to search.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த கலியன் மகன் சின்னதுரை . இருபத்திரண்டு வயதான இவர் அதே ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து வீட்டில் இருந்த மாணவியை 12-04-219 அன்று ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலத்காரம் செய்துள்ளார்.
அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டனர். சின்னதுரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சின்னதுரை மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு , நீதிபதி எழிலரசி 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.