/* */

கடலூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கடலூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
X

கடலூரில் நடைபெற்ற தனியாள் பள்ளி வாகனங்கள் ஆய்வு 

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளிகளுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன.

இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? முதலுதவி அளிக்கும் மருந்து பெட்டகம் உள்ளதா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம்.

இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். பின்னர் அந்த பேருந்து ஓட்டுநர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என தெரிவித்தார்.

முன்னதாக அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On: 25 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?