ரயிலில் சீட்டில் இடம் பிடிக்க ஏற்பட்ட தகராறு: அதிர்ச்சியில் பெண் மரணம்

திருசெந்தூர் செல்லும் ரயிலில் ஏற்பட்ட தகராறில் தந்தையை தாக்க முற்படுவதை பார்த்த மகள் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரயிலில் சீட்டில் இடம் பிடிக்க ஏற்பட்ட தகராறு: அதிர்ச்சியில் பெண் மரணம்
X

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் தனது மனைவி மகளுடன் திருச்செந்தூரில் உள்ள தனது இரண்டாவது மகளின் வீட்டிற்கு செல்ல செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு குடும்பத்தினர் ஏறிய நிலையில் சீட்டில் அமர்வதற்கு இரு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வந்தபோது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த கொண்டிருந்த மகள் மகேஸ்வரி அதிர்ச்சியில் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

ரயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்த பின்னர் ரயில்வே காவலர்கள், கடலூர் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 5:35 PM GMT

Related News